Tuesday, 8 June 2010

தமிழன் படும் பாடு .? சிரிக்க மட்டும் ...


கடந்த பதிவுகள் சீரியசான விடயத்தை எழுதியதால் நிறைய விமர்சனங்கள் .எனவே இந்த பதிவு சிறு நகைச்சுவைக்காக ஆனால் உண்மையில் நடந்தவை இவை .....


......................................................................................................................


கடந்த வாரம் வெம்பிளி பகுதிக்கு சென்றிருந்தேன் .இது தமிழர் அதிகமுள்ள பகுதி என்பதோடு வெள்ளைக்காரரை விட தென்னிந்தியர் அதிகம் வாழும் பகுதி .தமிழர் வர்த்தக நிலையங்கள் தெருவெங்கும் பரவியிருக்கின்றன .இப்படியே கடைத்தெருவிலே நடந்து சென்று கொண்டிருந்தபோது நீண்ட நாளைக்கு பின் ஒரு நண்பனை சந்தித்து கொண்டேன் .சுகம் விசாரித்தபோது சுவாரஸ்யமான விசயங்கள் கிடைத்தன.அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

மினிகப்(வாடகை கார் ) சாரதியாக இருந்தவர் இப்போ வெம்பிளியில் நகைக்கடை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார்.

ஏன் இப்ப மினி கப் ஓடுவதில்லை ?கடையில் வேலை செய்கிறாய்என கேட்ட போது வடிவேலு பாணியில் "வேண்டாம் முடியல அழுதுடுவேன் " என நகைச்சுவையாக தொடங்கியவர் தனது அனுபவங்களை சொல்ல தொடங்கினார்.

ஒரு தடவை அக்க்ரன் பகுதியில் போலிஷ் காரர் ஒருவரை (போலந்து நாட்டவரை இப்படியே அழைப்பர்)சவாரிக்கு நிலையத்தில் இருந்து ஏற்றிச் சென்றிருக்கிறார் .நேரமோ நடு இரவு .சிலவேளை வாடிக்கையாளர் பணம் தராமல் இறங்கி ஓடிவிடுவர் இந்த அனுபவம் நிறையவே இருந்தது. .சிலவேளை கறுப்பர் என்றால் மோசமாக தாக்கி விட்டு பணத்தை,நேவிகேட்டரை பறித்து எடுத்து சென்று விடுவர்.இதையெல்லாம் நினைத்தபடி இவனை பார்த்தால் ஒருமாதிரி புது மாதிரி இருக்கிறானே?என்ன பிரகண்டத்தை உண்டாக்குவானோ ?என மனது எச்சரித்தது.நான்தான் இப்படியான கஸ்ரமருக்கு வந்து மாட்டுப்படுரனே?என எண்ணியவாறே இவர் வாகனத்தை செலுத்திக்கொண்டிருக்கும் போது பின் சீற்றில் இருந்த போலந்தவர் முன்னுக்கு தலையை நீட்டியபடி ஹலோ நண்பா மியூசிக் சிஸ்டம் சவுண்டை கூட்டுமாறு சொல்லி விட்டு ஜன்னலை முழுதும் திறந்து விட்டுவிட்டு தலையை முன்னுக்கு நீட்டியபடியே வந்துள்ளார்.அதிக சத்தத்தை தாங்கியபடி ஏற்கனவே குடித்து வெறியில் இருந்தவன் நான் எது என்றாலும் கதைத்தால் ஏதும் பிரச்சனை பண்ணுவானோ என்ற பயத்தில் இவன் காரை செலுத்தி வந்திருக்கிறார்.ஏனென்றால் போலந்து நாட்டவர்களும் நம்மை போலவே கண்மூடித்தனமாக குடிப்பார்கள் .வெறி ஏறி

விட்டால் ஒரே சண்டைதான் .வாயில் இருந்து "குர்ருவா குர்ருவா "என வார்த்தைகள் வந்து கொட்டும் .குருவா என்றால் தகாத வார்த்தை என்று சொல்லத்தேவை இல்லை .இப்படியே பல தையும் திங் பண்ணிக்கொண்டு இந்த பய பிள்ளை காரோட்டி கொண்டு வந்திருக்கிறார்.

ஒரு மாதிரி அவன் சொன்ன சந்தி வந்து விட்டது. இடம் வந்ததும் அவன் எறங்கி விட்டு ஏழு பவுன்ஸ் பணம் செலுத்தி விட்டு நல்ல பிள்ளையாய் விரைவாய் சென்று விட்டான் .இவர் திரும்ப காரை நிலையத்திற்கு கொண்டு வரும்போது சீ இவனை நினைத்து வீணாய் மனதை அலட்டி கொண்டோமே என நினைத்தபடி ஜன்னலை ஓட்டமடிக் சுவிட்ச் மூலம் பூட்டியபோது குப் என்று நாற்றம் மூக்கை துளைத்தது .

என்னவென்று பதறியபடி காரை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கி பின் சீற்றை பார்த்த போது தூக்கி வாரி போட்டது ."ஷிட் "என்று தலையில் அடித்து கொள்வதை தவிர வேறு வழி?

இன்னுமா புரியலை?

ஆமாங்க நிசமா ஷிட் தானுங்கோ ...அப் பிராணி ......சாரி..சாரி ... அப் பிரயாணி பின் சீற்றில் மலம் கழித்து இருந்தார் சாவகாசமாக.இப்பதான் நினைவுக்கு வந்தது அவர் சவுண்டை கூட்டி விட்டது தனது சவுண்டு கேட்காமல் இருக்க ,ஜன்னலை திறந்து விட்டது நாற்றம் தெரியாமலிருக்க ,தலையை நீட்டி எழும்பியிருந்து வந்ததது பேண்டை கழட்ட என்று.
தனது தலை விதியை நொந்தபடி அதை சுத்தமாக்க தொடங்கினார்.என்ன கருமாந்திரத்தை திண்டு தொலைச்சானோ இப்படி ஏழு வர்ணத்தையும் வாகனத்தில் வாரி இறைத்திருந்தான்.

பிறகென்ன அசுத்தத்தை சுத்தப்படுத்தி விட்டு காரை கார் வோஷுக்கு விட்டதுதான்..பிறகொரு தடவவை ஒரு நாள் இரவு ஒரு ஜோடியை ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறார்.அவர்கள் காரினுள் முத்தமிட்டபடியே வந்திருக்கின்றனர்.இங்கு முத்தமிடாமல் வந்தாலே புதினமான விஷயம் என்பதால் இதை கண்டு கொள்ளாமல் வந்திருக்கிறார்.ஒரு இருட்டான பகுதியில் வந்த போது அந்த ஆண் வண்டியை நிறுத்துமாறு சடாரென்று கூறியுள்ளார்.இவனும் நிறுத்தி விட்டு என்னவென்று கேட்டுள்ளார் .அதற்கு அந்த ஆண் சொன்னார் அரை மணி நேரம் கொஞ்சம் தள்ளி நிற்க முடியுமா ?தாம் காரினுள் இருக்க போகிறோம் இருபது பவுண்ட்ஸ் பணம் தருகிறோம் என்று.வந்த ஆத்திரத்துக்கு அவர்களை அப்படியே நாலு சாத்து சாத்தலாம் மாதிரி இருந்தது .ம்ம்ம் ..என அங்கலாய்த்தார்.


இதை விட வாரத்திற்கு ஒரு கஸ்ரமராவது பணம் தராமல் இறங்கி ஓடி விடுகின்றான் .இந்த சாரதி தொழிலை விட வேறெதுவும் செய்யலாம் என நொந்து நூடில்சானவர் சொன்னார்.உண்மை தானுங்களே .....


1 comment: